தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அரசாங்கமே சாராயம் விற்பது கொடுமை என்பது  இந்தியா முழுக்க பேசப்படும் விஷயமாகி விட்டது.

இதனால் டாஸ்மாக்கை மூடி  விடலாம் என்கிற முடிவிற்கு கிட்டத்தட்ட தமிழக அரசு வந்து விட்டதாகவே கூறுகிறார்கள்.

மீண்டும் தனியார் வசம் மதுக்கடைகள் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது என்றும் மது ஒழிப்பிற்கு வாய்ப்பே இல்லை என்றும் பேசப்பட்டதாம்.

அதிகம் படித்தவை:  டாஸ்மாக் கடையை அடித்து திறந்த பெண்கள்!

அதே நேரம் கஜானா காலியானால் நிர்வாகம் எப்படி நடத்துவது? அம்மா உணவகங்கள் போன்ற விஷயங்களுக்கு நிதி ஆதாரம் தேவைப்படும். அதற்காக அரசு மணல் குவாரிகள், கிரானைட் தொழில் கூடவே மும்பை போல ரெட்லைட் ஏரியாக்கள் திறந்தால் என்ன என்பது குறித்தும் அலசப்பட்டது என்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  குடிமகன்களுக்கு ஓர் நற்செய்தி -1500 ஒயின் ஷாப்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை

அரசு மதுக்கடை நடத்தி பெயரைக் கெடுத்துக் கொண்டது  போல, அரசு விபச்சாரமும் நடத்தி பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா என்பதும் அலசப்பட்டுள்ளது என்கிறது அந்த வார இதழ்.

நாடு நலமாக இல்லை நமச்சிவாயா..!