பீட்சா என்ற ஸ்லீப்பர் ஹிட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் கார்த்திக் சுப்பாராஜ். இவர் அடுத்து இயக்கிய ஜிகர்தண்டா படமும் அவரை ஹிட் இயக்குனர்கள் பட்டியலில் சேர்த்தது.

அவரது இயக்கத்தில் சென்ற வாரம் வெளிவந்த இறைவி படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தாலும் இந்த படத்தால் ஒரு பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.

இந்த படத்தில் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி, தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் (TFPC ) இயக்குனருக்கு “ரெட் கார்டு” கொடுத்து தடை விதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது..இப்படி நடந்தால் சுப்பாராஜின் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.