fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

4 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்.. 16 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. எச்சரிக்கை

rain

Tamil Nadu | தமிழ் நாடு

4 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்.. 16 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று அதி தீவிர மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, கன்னியாக்குமரி, கடலூர், நாகப்பட்டினம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

இன்றும் நாளையும் கனமழை பெய்யும். அதன்பின் காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் 2 நாட்களில் கனமழை அதி தீவிர மழையாக மாறும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top