Sports | விளையாட்டு
ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற லசித் மலிங்கா செய்த சாதனைகள் – ஒரு பார்வை.
தனது யார்க்கர் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணற வைப்பவர் மலிங்கா. இவர் கடந்த வெள்ளியன்று வங்கதேச அணியுடன் மோதிய போட்டியுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் 2011-ல் ஒய்வு பெற்ற இவர் டி 20 போட்டிகளில் அடுத்தாண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை வரை விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் ஒரு நாள் போட்டிகளில் செய்த சாதனைகள் பற்றி வாங்க பார்ப்போம் ..
ஒருநாள் கிரிக்கெட்டில் 338 விக்கெட்டுகளுடன், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் லிஸ்டில் 9 வது இடத்தில் உள்ளார். (முரளிதரன் 534 , வாஸ் 322 ). ஆக மூன்றாவது இலங்கை வீரராக இணைகிறார் இந்த லிஸ்டில்.
உலகக்கோப்பையில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த வீரர் மலிங்கா மட்டுமே. 2007 தென்னாப்பிரிக்கா , 2011 கென்யா அணிக்கு எதிராக. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மூன்று ஹாட்ரிக் (ஆஸ்திரேலியா) எடுத்த ஒரே பௌலர் மலிங்கா.
உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியது மலிங்கா தான், 26 இன்னிங்ஸ்.
உலகக்கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த லிஸ்டில் 56 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்தில உள்ளார். முரளிதரன் 68 , மெக்ராத் 71 .
Lasith Malinga's Farewell – Special Moments: https://t.co/CFvNyRWtDS #ThankYouMalinga #Legend pic.twitter.com/CvgqNeulVw
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 27, 2019
ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்த ஒரே பந்துவீச்சாளர் லசித் மலிங்கா. 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இதனை செய்தார்.
8 முறை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுளார் இவர். அந்த லிஸ்டில் ஐந்தாவது இடம் இவருக்கு.
ஒருநாள் போட்டிகள் அரங்கில் மலிங்கா 11 முறை நான்கு விக்கெட்டுகள் எடுத்தார்.
இலங்கை டீம்மை பொறுத்தவரை அதிக ஸ்ட்ரிக் ரேட் உள்ள பௌலர் இடத்தில அஜந்தா மெண்டிஸ் அடுத்து இரண்டாம் இடத்தில உள்ளார்.
பேட்டிங்கிலும் ஒரு சாதனை உள்ளது இவர் வசம். இலங்கை அணிக்காக நம்பர் 10 பொசிஷனில் இறங்கி அரை சத்தம் அடித்த ஒருவர், இதுவரை இவர் மட்டுமே.
