ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை.. அடக்கடவுளே இவ்வளவு தியேட்டரில் ஹவுஸ் ஃபுல்லா

இத்தனை நாட்களின் காத்திருப்புக்கு பிறகு ஒரு வழியாக திரையரங்கை தெரிக்கவிட இந்த வாரம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது H. வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படம். அஜித்குமார் ரசிகர்கள் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது.

இந்த நேரத்தில் அஜித் ரசிகர்களின் முழு முதல் தேவையாக இருப்பது முதல் நாள் முதல் காட்சியில் படத்தை பார்த்துவிட வேண்டும் என்பது மட்டுமே. அப்படி இன்றைய டிரண்டிங் டாப்பிக்காக வலம் வருவது, வலிமை படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டது என்பதுதான்.

வலிமை படத்திற்கான முன்பதிவு மின்னல் வேகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. அதனை நிரூபிக்கும் விதமாக பல தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதில் ஒரு முக்கிய தகவலாக தமிழில் மட்டும் இந்த வலிமை படத்தின் முன்பதிவு விவரங்கள் வெளியாகி உள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் மாஸ் காட்டிய அஜித்குமார் இந்த வலிமை படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. கொரானாவுக்காக இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு பின்பு இறுதியாக பிப்ரவரி 24 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் தான் தமிழில் மட்டும் வெளியாக இருந்த இந்த படத்தின் டப்பிங் வேலைகள் முடிக்கப்பட்டு 4 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல வலிமை படத்திற்கு நேரம் அப்படி அமைந்தது. படத்தின் புரோமாசனுக்கு என போனி கபூர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அஜித் ரசிகர்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்து விட்டார். இந்த நிலையில் தான் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் இப்போது மட்டும் 1.84 கோடி ரூபாய் அளவிற்கு முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் 204 இடங்களில் வலிமை படம் இப்போதே ஹவுஸ் ஃபுல் ஆகி விட்டது. மேலும் 61 இடங்களில் மிக வேகமாக டிக்கெட்டுகள் விற்று தீருகிறது என தகவல் வெளியாகி உள்ளது. படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் இருக்கக்கூடிய நிலையில் இப்போதே வலிமை காய்ச்சல் அஜித் ரசிகர்களுக்கு மின்னல் வேகத்தில் பரவ ஆரம்பித்து இருக்கிறது.

படத்தின் பஸ்ட் லுக் ஆரம்பித்து சமீபத்தில் இயக்குனர் H. வினோத் வெளியிட்ட அஜித்குமார் அவர்களின் நெகடிவ் லுக் வரை படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள். அவர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இயக்குனர் வினோத். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த நேர் கொண்ட பார்வை ரீமேக் படமாக போய் விட்டது.அதனால் இந்த படத்தில் வினோத் ஆக்சன் காட்சிகளில் புகுந்து விளையாடி இருப்பார் என சொல்லப்படுகிறது. எல்லாம் ஓகே ஆனால் இந்த கொரோனா பயலை நெனச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு..!

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்று முடியும் வரை கொரோனா குறித்து வாய் திறக்காத தமிழக அரசு தற்போது கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் எதுவும் அறிவித்தால் முதலில் பாதிக்கப்படுவது திரையரங்குகள் தான்.ஏற்கனவே பல முறை தள்ளிப்போன இந்த வலிமை, தற்போது மிக பிரமாண்டமாக வெளியாக போகும் இந்தப்படத்தினை மிகுந்த எதிர்பார்ப்புடன் தியேட்டர்களில் அதன் உரிமையாளர்கள் வெளியிடுகின்றனர். அந்த நேரத்தில் கட்டுப்பாடுகள் ஏதேனும் விதிக்கபபட்டால் அது நிச்சயம் படத்தின் கலெக்சனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்