Connect with us

Cinemapettai

icc-test

Sports | விளையாட்டு

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் யார் தெரியுமா? ஐசிசி வெளியிட்ட அட்டவணை

உலக அளவில் அனைவராலும் ரசிக்கப்படும் விளையாட்டாக கிரிக்கெட் பார்க்கப்படுகிறது. விளையாட்டாக மட்டுமில்லாமல் வாழ்க்கையாகவும் சிலருக்கு பெரிய அளவில் பங்களிப்பை வழங்கியுள்ளது.

தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் நீண்ட நாட்களாக முதல் இடத்தில் இருந்த ஸ்மித் தடுமாறி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார். இந்திய கேப்டன் கோலி மீண்டும் ஓர் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரை தொடர்ந்து வில்லியம்சன், புஜாரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

பாகிஸ்தான் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி வார்னர் 17வது இடத்தில் இருந்தார். இந்த தொடரில் முச்சதம் அடித்ததன் மூலம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் ரஹானே உள்ளார்.

டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் (பேட்டிங்)
1) கோலி – 928
2) ஸ்மித் – 923
3) வில்லியம்சன் – 877
4) புஜாரா – 791
5) வார்னர் -764
6) ரஹானே – 759
7) ரூட்- 752
8) லபுஸ்சக்னே – 731
9) நிக்கோல்ஸ் – 726
10) கருணரத்னே – 723

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top