கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டையே உலுக்கிய சம்பவம் பெண் இன்ஜினியர் சுவாதி கொலை.சென்னையின் பரபரப்பான ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இந்த கொலை நடந்த போது யாரும் தடுக்காமல் விட்டுள்ளனர்.

இன்னும் அந்த குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை.ஆனால், வழக்கம்போல இந்த பெண் காதலித்து ஏமாற்றியிருப்பார் போன்ற காரணங்களை கூறி அந்த பெண்ணின் மீது சிலர் களங்கத்தை கற்பித்து வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் சினிமாவில் பெண்களை திட்டி, வெட்றா அவள, குத்துடா அவள போன்ற பாடல்கள் தான் என சிலர் தங்கள் கருத்துகளை கூறியுள்ளனர்.இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.