இறைவி தலைப்பிலேயே ஒரு புதுவிதமான ஈர்ப்பை கொண்டு வந்தார் கார்த்திக் சுப்புராஜ். இதற்கு முன் ஜிகர்தண்டா என்ற டைட்டிலில் வெப்பம்+குளிர் சேர்ந்தது தான் இந்த தலைப்பு என கூறி அசர வைத்தார்.

அதேபோல் இறைவன் என்று இதுவரை ஆண் கடவுளை மட்டும் குறிப்பிட்டு வந்த காலங்களில் இறைவி என்று பெரிதும் பழக்கமில்லாத ஒரு வார்த்தையால் கவர்ந்தார்.

இப்படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ஹிட் அடிக்க, கண்டிப்பாக இந்த படத்தில் ஃபெமினிஷம் இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

அதற்காக இது பெண்களுக்கான படம் என்று கூறிவிட முடியாது, ஆண்கள் பெண்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதற்கான படமாக தான் இது இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இறைவி தமிழகம் முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது, தற்போதே பல மல்டிப்ளக்‌ஷ் திரையரங்குகளில் முன்பதிவு முடிந்துவிட்டது. இறைவி எப்படிப்பட்ட படம் என்பதை காண நாளை வரை காத்திருங்கள்.