‘விவேகம்’ படத்துக்குப் பிறகு, தல அஜித் – சிறுத்தை சிவா நான்காவதாக இணையும் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. விவேகத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே தயாரிப்பதாகவும், ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி, தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவிப்பு வந்தது.

Siruthai Siva y

இப்படத்தை பற்றி இணையத்தில் தினமும் எதாவது செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. வேதாளம், விவேகம் படத்துக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கு வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டனர், யுவன் தான் இசையைமைப்பாளர். கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயின். நிவின் பாலி அல்லது விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளது என்று பல செய்திகள் உலவி வருகின்றது.


இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்து சிவா விளக்கம் அளித்துள்ளதாக புது தகவல் கசிந்துள்ளது.

முதலில் வீரம் 2 என்ற தலைப்பை தான் யோசித்தார்களாம். பின்னர் அந்த தலைப்பை பெற விஜயா ப்ரோடுக்ஷன்ஸ் கம்பெனியிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று யோசித்துள்ளனர் சிவா & டீம்.

ajith fans

பல நேரங்களில் அஜித் என்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ரசிகர்கள் எனக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், நானும் அவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என அஜீத் அடிக்கடி கூறுவாராம். எனவே புதிய படத்திற்கு விசுவாசம் என்ற தலைப்பை சிவா முடிவு செய்தார் என்கின்றனர் ஒருசாரார்.

அஜித் மற்றும் சத்யா ஜோதி பிலிம்ஸ் தன்னை நம்பி மீண்டும் வாய்ப்பு கொடுத்ததற்காக சிவா விசுவாசம் என பெயர் வைத்திருப்பார் என்று சொல்லி வந்த நேரத்தில், இது தான் காரணம் என்று அறிந்த தல ரசிகர்கள் செம்ம ஹாப்பியாக உள்ளனர்.