Connect with us
Cinemapettai

Cinemapettai

மனைவி மேல் உள்ள கோபத்தில் விமானத்தை கடலில் இறக்கிய பைலட்.. திடுக்கிடும் தகவல்

malasia-flight

India | இந்தியா

மனைவி மேல் உள்ள கோபத்தில் விமானத்தை கடலில் இறக்கிய பைலட்.. திடுக்கிடும் தகவல்

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான mh 370 விமானம் மாயமானது. தற்போது அந்த விமானத்தை ஓட்டிய  பைலட் வினோத மனநிலைதான் விமானம் காணாமல் போனதற்கு காரணம் என தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் விமானம் ஓட்டிய பைலட் மீது அடுக்கு அடுக்கு குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதோ அந்த குற்றச்சாட்டுகள்.

கடலில் விமானம் செல்வதற்கு முன்பதாகவே பயணிகள் அனைவரும் கொன்று விட்டதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு புறப்பட்ட விமானம் எங்கே சென்றது என இன்னும் தெரியவில்லை.

ஐந்து வருடங்களை கடந்தும் அதற்கான காரணம் துல்லியமாக இன்னும் கணிக்கப் படவில்லை இதுவே உலகின் மிகப்பெரிய மர்மமான முறையில் விமானம் காணாமல் போனது எனவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலையைப் பற்றியும் இன்னும் தெரியாமல் இருக்கிறது.

தற்போது பைலட் பற்றிய அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. விமானம் காணாமல் போனதற்கு காரணம் பைலட் தான். அவர் மலேசிய விமானத்தை இயக்கிய பைலட் ஜஹாரி அகமது ஷா வயது 53. இவருக்கு அதே விமானத்தில் பணி புரியும் பணிப்பெண்களிடம் தவறான பழக்கவழக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் அவரது மனைவிக்கு இது தெரிந்து போனதால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது மட்டுமின்றி மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதன் பிறகு தனிமை அறையிலேயே அவர் பல காலங்கள் வாழ்ந்து வந்துள்ளார்.

இதுபற்றி வில்லியம் லாங்ஜ்கவிச் எழுதியுள்ள கட்டுரையில் மலேசிய விமானம் காணாமல் போனது குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கும் மற்றும் உளவுத்துறை சமூகத்தினருக்கும், பைலட் மீது சந்தேகங்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் விமானம் காணாமல் போவதற்கு முன்பே பயணிகள் அனைவரும் ஒவ்வொருவராக இறந்துள்ளனர்.

அதாவது விமானம் 40 ஆயிரம் அடிக்கு மேல் உயரத்தில் பறந்தபோது உள்ளிருக்கும் ஆக்சிஜன் இணைப்பை பைலட் துண்டித்துள்ளார். இதையடுத்து மூச்சி விடமுடியாமல் பயணிகள் ஒவ்வொருவராக இறந்துள்ளதாகவும், இதன் பிறகே இந்திய பெருங்கடலுக்குள் விமானம் செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் விமானம் காணாமல் போகவில்லை பைலட் தான் அனைவரையும் கொலை செய்து, அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் கூறுகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top