Sports | விளையாட்டு
வார்னரை நீக்கியது ஏன்? காரணத்தை பகிர்ந்த டாம் மூடி! அட போங்க பாஸ்
2021 ஐபிஎல் போட்டிகள் ஜரூராக நடந்து வருகின்றது. வழக்கம் போல சென்னை, மும்பை, டெல்லி அணிகள் டாப் போஷின்ங்களில் உள்ளனர். இந்த சீசன் பெங்களூரு அணியும் கலக்கி வருகின்றனர்.
ஐபிஎல் இல் அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கலக்கும் டீம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இவர்கள், இம்முறை அந்தோ பரிதாபம் என உள்ளனர். 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளனர். இன்று அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்படுவார் என நேற்றே அறிவித்தனர், மேலும் போட்டியில் ஆடும் வெளிநாட்டு வீரர்களையும் மாற்றுவோம் எனவும் சொல்லியிருந்தனர்.
இன்று டீம்மில் மூன்று மாற்றங்கள் வார்னர், கவுல் மற்றும் சுஜித் வெளியே, மாற்றாக நபி, புவனேஷ்வர் மற்றும் சமத் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த முடிவு பற்றி ஹைதெராபாத் டீம்மின் Director Of Cricket Operations பின்வருமாறு கூறியுள்ளார்…
“இன்றைய போட்டியில் வார்னர் ஆடவில்லை. இது டீம் காம்பினேஷன் என்ற காரணத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு. இரண்டு வெளிநாட்டு பேட்ஸ்மேன் மற்றும் ஒரு ஆல் ரௌண்டார், ரஷீத் கான் என்பதே சிறந்த கூட்டணி.
பேர்ஸ்ட்டோ, வில்லியன்சன் நல்ல பார்மில் உள்ளனர், எனவே துரதிர்ஷ்ட வசமாக வார்னர் இன்று ஆடவில்லை. வார்னரும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்துடன் தான் உள்ளார். அதிர்ச்சியான முடிவு தான், எந்த வீரரும் தான் தனது திறனை நிரூபிக்க வேண்டும் என்று தான் நினைப்பார், ஆனால் டீம் மற்றும் நிர்வாகத்துக்கு ஏற்றது எது என்பதே முக்கியம்.
இந்த டீமுடன் அவர் இருந்துள்ளார், இந்த டீமும் அவரை சார்ந்து தான் இருந்துள்ளது. பழைய விஷயங்களை பற்றி யோசிப்பதை விட இந்த மேட்சுக்கு ஏற்ற மனநிலை மற்றும் வியூகமே முக்கியம்.
கடந்த இரண்டு, மூன்று நாட்களில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. வில்லியம்சன் தலைமை பொறுப்பை ஏற்கிறார். எவ்வளவு வேகமாக அதற்கு ஏற்றது போல அட்ஜஸ்ட் செய்து அனுகூலமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம் .” என பேசியுள்ளார்.

Hyderabad : Kane Williamson
எனினும் கேபிடேன்ஷிப் தவிர்த்து ஒபெநிங் பேட்ஸ்மேனாக வார்னர் கட்டாயம் ஆடியிருக்க வேண்டும் என்பதே ரசிகர்கள் மற்றும் ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.
