News | செய்திகள்
15 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் விராட் – அனுஷ்கா ! என்ன காரணம் தெரியுமா ?
பாலிவுட்டுக்கும் கிரிக்கெட்க்கும் எப்பொழுதுமே நல்ல உடன்பாடு உண்டு . ஷர்மிளா தாக்குர் – மன்சூர் அலி கான் பட்டோடி, அசாருதீன் – சங்கீதா பிஜிலானி , யுவராஜ் – ஹஸீல் கீச், ஹர்பஜன் – கீதா பஸ்ரா, விராட் – அனுஷ்கா சர்மா, சஹீர்கான் – சகாரிக்கா என லிஸ்ட் நீண்டு கொண்டே தான் போகும்.

Wedding Reception
விராட் – அனுஷ்கா
இந்த லிஸ்டில் இன்று மிகவும் பிரசித்தி என்றால் அது விராட் அனுஷ்கா தான். இவர்கள் பல வருடங்கள் காதல் பிரிந்து மணம் முடித்தனர். மேலும் தங்கள் துறையில் இன்றைய தேதியில் இவர்கள் தான் நம்பர் 1 . பல செலிபிரிட்டிகள் தங்கள் துறையில் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்ய தயங்குவர். ஆனால் இவர்கள் விதிவிலக்கு.
Where else would you wanna be when you have such a stunning view from home! 😇♥️ pic.twitter.com/u4LfeXmQ11
— Virat Kohli (@imVkohli) March 8, 2018
சமீபத்தில் தன் வீட்டு பால்கனியில் இருந்து எடுத்த போட்டோ ஒன்றை ட்விட்டரில் அப்லோட் செய்தார் கோலி.

Virat Kohli
அந்தநேரத்தில் தான் இவர் தங்கி இருக்கும் வீடு பற்றிய தகவல்கள் முதல் முதலாக வெளியானது. இந்நிலையில் இந்த ஜோடி வசிக்கும் வீட்டின் வாடகை ரூ. 15 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஜோடியின் வருமானம் பல கோடிகளை தொடுமே, இவர்கள் ஏன் வாடகைக்கு வீடு எடுத்து, தங்குகின்றனர் என்பதே பலரின் கேள்வி.
தென் மும்பையில் டாக்டர். அன்னி பெசன்ட் சாலையில், “ரஹேஜா லெஜெண்ட்” எனும் இடத்தில் தான் கோலி வீடு வாடகைக்கு எடுத்துள்ளார். 2,675 சதுர அடி பரப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 40 வது தளத்தில் தான் தற்பொழுது வசித்து வருகின்றனர். இந்த வீட்டை 24 மாதங்கள் , 16 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர் இந்த தம்பதி. மாத வாடகை 15 லட்சமாம்.
கடந்த 2016 இல் மும்பையின் ஒர்லி பகுதியில் ஓம்கார் 1973 என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ரெசிடென்ஷியல் பங்களா ஒன்றை 34 கோடிக்கு வாங்கினார் என்பது நாம் அறிந்ததே.

omkar-1973
அங்கு சில திருத்தம் மற்றும் மாற்றி அமைக்கும் பணிகள் நடப்பதன் காரணத்தால் தான், வேறு இடத்தில இந்த இடைப்பட்ட காலத்தை கழிக்க முடிவு செய்துள்ளது இந்த ஜோடி என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
