வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இந்த ஒரு விஷயம் தான் லியோ கல்லா கட்ட காரணம்.. ஆணித்தனமாக முடிவெடுத்த லோக்கி

Leo Movie: கடந்த 19ஆம் தேதி உலகம் முழுவதும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ படம் வெளியாகி தளபதி ரசிகர்களை குதூகலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகள் சோசியல் மீடியாவில் குவிந்தாலும் ஐந்தே நாளில் 475 கோடியை உலகம் முழுவதிலிருந்தும் வசூலித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த படத்தின் செகண்ட் ஆஃப் படு மொக்கையாக அமைந்தது. இந்த படம் லோகேஷ் எடுத்த படம் என்ற எதிர்பார்ப்புடன் வந்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. சொல்லப்போனால் லோகேஷ் முதல் பாதியை மட்டுமே எடுத்தார். இரண்டாம் பாதியில் அவருடைய அசிஸ்டன்ட் ரத்னகுமார் தான் இயக்கியிருக்கிறார்.

லியோ படப்பிடிப்பின் போது லோகேஷ் மற்றும் விஜய் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முக்கியமாக விஜய் த்ரிஷாவுடன் லிப் லாக் சீன் வைக்க வேண்டும் என அடம் பிடித்திருக்கிறார். தயாரிப்பாளர் லலித்-தும் இந்த படத்தில் ஏகப்பட்ட மாற்றத்தை செய்ய வேண்டும் என வற்புறுத்தியதால் லோகேஷ் பாணியில் இந்த படத்தை எடுக்க முடியாமல் போனது.

இருப்பினும் விஜய்யை மாஸ் ஹீரோவாக அவருடைய ரசிகர்கள் பார்க்க விரும்புவார்கள், அது லியோ படத்தில் இருக்கிறது. முதல் நாளில் லியோ படத்தின் வசூல் பலருக்கும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. ஆனால் இரண்டாம் நாள் வசூல், முதல் நாள் வசூலில் பாதி அளவு மட்டுமே கிடைத்தது.  குறிப்பாக அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் வசூல் மோசமாக இருந்தது.

முக்கியமாக தமிழ்நாட்டிலும் கலெக்சன் இல்லை. மூன்றாம் நான்காம் ஐந்தாம் நாட்களில் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு முக்கியமான காரணம் பூஜா ஹாலிடேஸ் தான். இந்த தொடர் விடுமுறையால் மட்டுமே படம் தப்பித்துக் கொண்டிருக்கிறது. அதோடு தற்சமயம் வேறு எந்த பெரிய ஹீரோக்களின் படங்களும் போட்டிக்கு ரிலீஸ் ஆகாததால் லியோ பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டுகிறது.

இந்த படத்தில் இருக்கும் ஹைனா சீன், கதாநாயகன் குடும்பத்திற்காக போராடும் கதை போன்றவற்றால் திரையரங்குகளில் பேமிலி ஆடியன்ஸும் குவிக்கின்றனர். இருந்தாலும் லோகேஷுக்கு இந்த படம் கருப்பு புள்ளியாக அமைந்துவிட்டது. அதனால் இனிமேல் விஜய்யை வைத்து படம் பண்ண மாட்டேன் என ஆணித்தனமாக முடிவெடுத்து இருக்கிறார். இது தளபதி ரசிகர்களை கொஞ்சம் வருத்தமடைய வைத்துள்ளது.

- Advertisement -

Trending News