சூர்ய குமாருக்கு இந்திய அணியில் இடமில்லை, காரணம் இது தான்! அடுத்த அம்பதி ராயுடு ஆகிடாதீங்க!

கொரானாவின் தொற்று காரணமாக இம்முறை தாமதமாக தொடங்கிய ஐபிஎல் 2020 UAE யில் நடந்து முடிந்துவிட்டது.மும்பை வழக்கம் போல கோப்பையை தட்டி சென்றது. ஐபிஎல் முடிந்த பின் வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்று பயணம் புறப்பட்டு விட்டனர்.

சூர்ய குமார் யாதவ் என்ற பெயர் தான் இந்த சீசன் பல முறை உச்சரிக்கப்ட்ட ஒன்று. டீம் செலெக்ஷனில் சூர்ய குமார் யாதவ் இடம் பெறாதது பெரிய விவாத பொருள் ஆனது. சாமானிய ரசிகனுக்கு அவர் இந்திய அணியில் இடம் பிடிக்க உண்மையில் தகுதியானவரா என கேள்வி எழுந்துள்ளது.

ஆர் சி பி மற்றும் பெங்களூரு போட்டி சமயத்தில் கோலி, சூர்யாவிடம் வார்த்தை ஜாலம் காமித்து வம்புக்கு இழுத்தார், சூர்யா அமைதி காத்த சம்பவம் நாம் அறிந்ததே. கோலி வேண்டுமென்றே ரோஹித் சர்மாவிற்கு அணியில் இடம் கொடுக்கவில்லை. ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக இருக்கும் வீரர்களுக்கும் அணியில் இடம் மறுக்கப்படுகிறது என்றெல்லாம் ஊடங்கங்கள் பேச ஆரம்பித்தனர்.

சூர்ய குமார் இன்றையை நவீன கால பேட்ஸ்மான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. பவர் ஹிட்டிங் ஆடுபவர். அணைத்து திசைகளிலும் பந்தை அடித்து பறக்கவிடுவார். நல்ல பீல்டர். பார்ட் டைம் பௌலர் கூட. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை ஐபிஎல், உள்ளூர் போட்டிகளில் ஒரு சீசன் நன்றாக விளையாடினால் கூட ஆல் – ரவுண்டர், பௌலர்களுக்கு எளிதில் டீம்மில் வாய்ப்பு கிடைத்து விடும், ஆனால் பேட்ஸ்மான்கள் நிலை அப்படி கிடையாது. தொடர்ந்து பல சீசன்கள் விளையாட வேண்டும்.

சூர்யா மும்பை அணிக்காக விளையாடுபவர். நம் உள்ளூர் டெஸ்ட், ஒரு நாள், டி 20 பார்மட்களில் 39 , 35 , 31 என சராசரி வைத்துள்ளார். மும்பை டீமுக்காக ரஞ்சி போட்டிகளில் கலக்கியுள்ளார். டீம் கேப்டனாகவும் இருந்தவர். முறையே அணைத்து ஏஜ் க்ரூப் கிரிக்கெட் ஆடி முன்னேறியவர்.

ஆனால் 30 வயது ஆகியும், இந்திய டீம்மில் இடம் இல்லை. இவருக்கு வாய்ப்பு கிடைக்காததன் முக்கிய காரணமாக சொல்லப்படுவது மனிதரின் கோபமும், எதையும், எவரையும் எடுத்தறிந்து நடக்கும் மனப்பான்மை தான் என்கின்றனர் மும்பை கிரிக்கெட் வட்டாரங்களில். இதற்கு சில பல சம்பவங்களையும் சொல்கின்றனர் அவர்கள்.

சித்தேஷ் லாட் என்ற வீரருடன் மைதானத்தில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார், அதிலும் கோபம் அடங்காத இவர் அஸ்ஸோஷேஷனில் உள்ள பாரம்பரிய பொருள் ஒன்றை உடைத்துள்ளார். எனினும் இளம் வீரர் என்பதனால் பெரிது படுத்தவில்லை மும்பை நிர்வாகம்.

அடுத்தமுறை ஷரத்துல் தாகூருடன் சண்டை, கோபம் அடங்காத இவர் போன் செய்து கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். அவர் அதை ரெக்கார்ட் செய்து, புகார் கொடுத்த சம்பவமும் நடந்தது. இதை விட உச்ச என்னவெனில், இவர் கேட்பேனாக இருந்த நேரத்தில் ஜெய் பிஸ்தா என்ற வீரரை நீக்க வேண் டும் என்ன சொல்லியுள்ளார்.

தேர்வாளர்கள், பயிற்சியாளர் சம்மதிக்க மறுக்க, கேப்டன்ஷிப் வேண்டாம் என சென்றுள்ளார். ஒழுங்கீன நடவெடிக்கை காரணமாக டீம்மில் இருந்தும் நீக்கப்பட்டாராம். இப்படி பல கதைகளை சொல்கிறார்கள் மும்பை வட்டாரத்தில்.

ஆனால் மனிதர் வயது ஆக ஆக தன்னை தானே மாற்றி செதுக்கி வருகிறார். யோகா, தியானம் மற்றும் மனதளவில் திடமாக இருப்பது என தற்பொழுது மாறியுள்ளார். இவருக்கு இது போன்ற நேரத்தில் மும்பை போர்ட், மற்றும் பிசிசிஐ நல்ல ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் பட்சத்தில் விரைவில் இந்திய டீம்மில் இணைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வி ஆர் வைட்டிங் சூர்யா.

kohli surya kumar yadav