Connect with us
Cinemapettai

Cinemapettai

ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா பௌலிங் போடாததுக்கு காரணம் தெரியுமா.? உண்மையை உளறிய ரோகித் ஷர்மா!

hardik-pandya-1

Sports | விளையாட்டு

ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா பௌலிங் போடாததுக்கு காரணம் தெரியுமா.? உண்மையை உளறிய ரோகித் ஷர்மா!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடுகிறார். மும்பையில் அணியில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல போட்டிகளை வென்று கொடுத்து உள்ளார்.

இந்த சீசனில் அவர் பந்து வீசுவதில்லை, மாறாக முழு நேர பேட்டிங்கில் கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்த வருடம் முழுவதும் ஏன் பந்துவீச வரவில்லை என்பது குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பேட்டி அளித்துள்ளார்.

பேட்டிங்கில் சிறப்பாக ஆடி வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, அதன் காரணமாக அவர் பந்து வீசுவதில் சில கஷ்டங்களை உணருகிறார்.

இந்த ஆண்டு முழுவதும் அவருக்கு பந்து வீசுவதில் ஓய்வு கொடுக்கும் முனைப்பில் தான் அவரை அனுமதிப்பதில்லை எனக் கூறினார்.

இருப்பினும் அவர் மீண்டும் பந்து வீசுவதை காண ஆவலுடன் இருப்பதாகவும். அவர் கூடிய விரைவில் முழு உடற்தகுதியுடன் பந்து வீசுவார் என ரோகித் தெரிவித்தார்.

hardik-pandya

hardik-pandya

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top