நமிதா வெளியேறியதற்கு இதுதான் காரணமா? உண்மையை உடைத்த ஐக்கி பெர்ரி!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் நான்கு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் திடீரென்று திருநங்கை நமிதா மாரிமுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவர் என்ன காரணத்திற்காக வெளியேறினார் என்று இன்றுவரை பிக்பாஸ் தரப்பிலிருந்து தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் எலிமினேட் செய்யப்படும் நபரிடம் அதற்கான விளக்கத்தை பெற ரசிகர்கள் முயற்சிக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எலிமினேட் செய்யப்பட்ட ஐக்கி பெர்ரி, தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நேரலையில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் சமீபத்தில் ஐக்கி பெர்ரி மற்றும் நமிதா மாரிமுத்து இருவரும் நேரலையில் ரசிகர்களிடம் கலகலப்பாக உரையாடினார்கள். பிக்பாஸ் வீட்டில் ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க்கின் மூலம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய நமிதா மாரிமுத்து உணர்ச்சிப்பூர்வமாக சிலிர்ப்பூட்டும் தகவலை பகிர்ந்து கொண்டார். இதனால் நமிதா மாரிமுத்துவிற்கு மன அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை குறைவால் பிக்பாஸ் வீட்டில் இருந்து கிளம்பி விட்டாராம். இதுதான் உண்மையான காரணம் என்று ஐக்கி பெர்ரி மற்றும் நமிதா மாரிமுத்து இருவரும் ரசிகர்களிடம் விளக்கமளித்தார்கள்.

ஆனால் தாமரை மற்றும் நமிதா மாரிமுத்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டு அதனால் தான் நமிதா வெளியேறினாரா? என்று சிலர் கேள்வி எழுப்பின. அப்போது பேசிய நமிதா மாரிமுத்து, ‘அப்படி ஒன்றும் நடக்கவில்லை’ என்றார். அத்துடன் தாமரையில் முகத்தில் இருந்த காயம் நமிதா வாழ்ந்தாவால் ஏற்பட்டதா? என்று ரசிகர்கள் வினவியதற்கு ஐக்கி பெர்ரி, ‘நான் பிக்பாஸ் வீட்டில் தான் இருந்தேன். அப்படி ஒன்றும் நடக்கவில்லையே!’ என்று பதிலளித்தார்.

மேலும் தாமரையும் ஐக்கி பெர்ரியும் அவ்வபோது கிள்ளியும் அடித்தும் விளையாடுவார்களாம். அப்போது பல முறை ஐக்கி பெர்ரியின் நகம் தாமரையின் முகத்தை கீரி இருக்கிறதாம். அதனால் தாமரையின் முகத்தில் கோடு ஏற்பட்டதாகவும் ஐக்கி பெர்ரி விளக்கமளித்தார். கடந்த ஐந்து வருடங்களாக ஐக்கி பெர்ரியும் நமிதாவும் நண்பர்களாம். பிக்பாஸ் இருக்கு செல்லும் விசயம் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இருந்ததாம்.

மேலும் நமிதா மாரிமுத்து மட்டும் அதிக நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் நிச்சயம் நிரூப் மற்றும் வருண் போன்றோருக்கு கடும் போட்டியாக இருந்திருப்பார் என்றும் ஐக்கி பெர்ரி விமர்சித்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்