இந்தியா தோற்றது இலங்கைட்ட அல்ல.. மொத்த சறுக்கல்களுக்கும் பின்னால் உள்ள அதிர்ச்சி தகவல்

இலங்கை அணி இந்திய அணியை 27 வருடங்களுக்கு பிறகு தங்களது சொந்த மண்ணில் வைத்து சூறையாடிவிட்டது. ஏதோ உலகக்கோப்பையை ஜெயித்தது போல் அவர்கள் கொண்டாடி தீர்த்தனர். இது ஒரு புறம் இருந்தாலும் அடிப்படையில் நடந்த உண்மைகள் என்னவென்று இதில் பார்க்கலாம்.

இலங்கையை பொறுத்தவரை சுழற் பந்து வீச்சில் மிரட்டி இந்தியாவை தோற்கடித்தது. போட்டிகள் நடைபெற்ற மைதானத்தில் இரண்டாவது பேட் செய்வது மிகவும் கடினம். மின்விளக்கின் கீழ் ஸ்பின்னர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல. கத்துக்குட்டி பௌலர்களான ஹசரங்கா, வெள்ளாளகே, போன்றவர்கள் எல்லாம் இந்தியாவை பல் பிடித்து பார்த்தனர்.

மொத்த சறுக்கல்களுக்கும் பின்னால் உள்ள அதிர்ச்சி தகவல்

இப்படித்தான் அஜந்தா மென்டிஸ் ஏசியா கப் பைனல்ல 6 விக்கெட் எடுத்து இந்தியாவை துவம்சம் செய்தார் அதுக்கப்புறம் அஜந்தா மென்டிஸ் என்ற பெயரைக் கூட பார்க்க முடியாமல் போய்விட்டது

இப்பொழுது இலங்கை அணி இருக்கிற நிலைமையில் ஒரு மேட்ச் மட்டும் வைத்து அவர்களை கணித்து விட முடியாது. அடுத்த போட்டியில் இதே பவுலர் அடி வாங்கினால் இப்ப இருக்கிற நிலைமையில் அவரோட கேரியரே கேள்விக்குறியாகி விடும்.

இலங்கையில் உள்ள மைதானங்கள் பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்று. பகல் இரவு போட்டி இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெறுவது அவ்வளவு எளிது கிடையாது. வலுவாக இந்திய அணி உள்ளதால் தான் இவ்வளவு தூரம் போராடி உள்ளது.

அதிர்ஷ்டவசமாக இலங்கை அணி எல்லா போட்டிகளிலும் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்து விட்டது. ஆடுகளம் உதவியினால் தான் இலங்கை அணி வெற்றி பெற்றது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதல் பேட்டிங் செய்தால் இலங்கை அணியின் நிலைமை மோசமா போயிருக்கும். இந்திய அணியில் இருப்பவர்கள் எல்லாம் ஸ்பின் நன்றாக விளையாட கூடியவர்கள். அவர்கள் தடுமாறியது பவுலர்களிடம் அல்ல, இலங்கையில் ஆடுகளத்தில் தான்.

Next Story

- Advertisement -