Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷ் வெற்றிமாறனின் சூதாடி படம் ஷூட்டிங் ஆரம்பித்த பின் கைவிடப்பட்டது ஏன் தெரியுமா
இன்றையை கோலிவுட் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் வெற்றிமாறன். பாலுமஹேந்திராவின் பட்டறையில் தீட்டப்பட்டவர். சினிமா மீதான அதீத காதல் கொண்டவர்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என்பதே இயக்குனரின் படங்கள். இவர் இயக்கிய ஐந்து படங்களில் நான்கு படத்தில் தனுஷ் தான் ஹீரோ. தனுஷுடன் மட்டுமே இணைந்து பல ஹிட் கொடுத்தவர். தற்பொழுது சூரி, சூர்யா, நெட் பிலிக்ஸ் ஆந்தாலஜி படம் என இவரது அடுத்தடுத்த படங்களின் லிஸ்ட் உள்ளது.
ஆடுகளம் முடிந்த உடன் ஆரம்பிக்கப்பட்ட ப்ரொஜெக்ட் தான் சூதாடி. சீட்டாட்டம் மையப்படுத்தும் கதை. பார்த்திபன் முக்கிய ரோலில் நடிக்க, மீனாக்ஷி ஒப்பந்தம் ஆன ப்ரொஜெக்ட். ஷூட்டிங் சென்ற பின் இப்படம் கைவிடப்பட்டது.
தனுஷ் ஹிந்தி படம் நடிக்க சென்றுவிட்டார், வெற்றி தினேஷ் வைத்து விசாரணை ஆரம்பித்துவிட்டார். பிரபல யூ ட்யூப் சானலில் வெற்றியின் நேர்காணல் வெளியானது. ரசிகர்களின் கேள்வி பதில் தந்தார். அப்பொழுது சூதாடி பற்றி பேசியுள்ளார். எடிட் செய்த காட்சிகளை பார்த்த பொழுது ஆடுகளம் படத்துடன் பல ஷாட்ஸ், மூட், டெம்போ ஒன்று போலவே இருந்ததாம்.
எனவே அதே விஷயத்தை திரும்ப திரும்ப, அதுவும் தெரிஞ்சே எடுப்பது சரியாக படாததன் காரணத்தால் அந்த படத்தை ட்ராப் செய்தார்களாம்.

dhanush-vetrimaran-cinemapettai
