கேரளாவில் இருந்து கோலிவுட் வந்த அமலா பாலுக்கு மைனா படம் கை கொடுத்தது. இதையடுத்து அவர் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டே ஆண்டுகளில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று விஜய் போட்ட கன்டிஷனை அமலா பால் மீறியதால் தான் தற்போது விவாகரத்து வரை வந்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யும், அமலா பாலும் பிரிய மற்றொரு காரணமும் உள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது திருமணத்திற்கு பிறகு அமலா பால் குட்டி குட்டியாக ஆடை அணிந்தது விஜய் மற்றும் அவரது குடும்பத்தாரை முகம் சுளிக்க வைத்ததாம்.

அமலா அரைகுறை ஆடை அணிந்து பார்ட்டிகளுக்கு சென்று ஆட்டம் போடுவதை பார்த்த அவரின் மாமனார், மாமியார் வேதனை அடைந்ததாக முன்பே செய்திகள் வெளியாகின.

ஏற்கனவே அமலா அரைகுறை ஆடை அணிவது பிடிக்காமல் இருந்த விஜய்க்கு அவர் தொடர்ந்து நடித்து வருவது மேலும் கோபத்தை ஏற்படுத்தியதாம்.