Tamil Cinema News | சினிமா செய்திகள்
17 வருடமாக யுவன் சங்கர் ராஜாவை ஒதுக்கும் தளபதி விஜய்.. காரணம் இதுதான்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது படங்களுக்கு இசையமைக்க பல இசையமைப்பாளர்கள் தவம் கிடக்கின்றனர்.
அப்படி விஜய் பட வாய்ப்பு கிடைக்கும் போது தங்களுடைய முழு திறமையையும் காட்டி பெரிய அளவில் வெற்றியைப் பெற்று விடுகிறார்கள்.
அதேபோல் விஜய் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பல இசையமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் பிரபலமாகாத இசையமைப்பாளர்கள் உடனும் பணியாற்றியுள்ளார்.
2003 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்தவர் தான் யுவன் சங்கர் ராஜா. அதன் பிறகு தற்போது வரை விஜய்யுடன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

pudhiya-geethai-cinemapettai
இத்தனைக்கும் புதிய கீதை படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் பெரும்பாலும் யுவன் ஷங்கர் ராஜாவை பரிசீலனை செய்வதில்லையாம்.
அதன் காரணமாகவே 17 வருடமாக விஜய் படங்களுக்கு இசை அமைக்கவில்லை யுவன் சங்கர் ராஜா. ஆனால் சமீபத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்காக ஒரு பாடல் பாடிக் கொடுத்துள்ளார் யுவன்.
