Connect with us
Cinemapettai

Cinemapettai

நாலு வருஷமா விஜய் டிவி பக்கம் வராம இருக்க காரணம் இதுதான்.. ஓப்பனாக பேசிய VJ ரம்யா

vij-ramya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாலு வருஷமா விஜய் டிவி பக்கம் வராம இருக்க காரணம் இதுதான்.. ஓப்பனாக பேசிய VJ ரம்யா

விஜய் டிவி மூலம் பிரபலமான Vj ரம்யா கடந்த நான்கு வருடமாக விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காதது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது. அதற்கான காரணத்தை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ரம்யா.

வழக்கம்போல் சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் விஜய் டிவியில் பணியாற்றி பிரபலமடைந்தவர் தான் ரம்யா. விஜய் டிவியின் ராசியோ என்னமோ தெரியவில்லை, கல்யாணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.

ரம்யாவின் சினிமா ஆர்வம் தான் அவரது குடும்ப வாழ்க்கையை சிதைத்து விட்டதாக பலரும் பல்வேறு விதமாக வதந்திகளை கிளப்பி விட்டனர். இருந்தாலும் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து வருகிறார் ரம்யா.

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் ரம்யா, ஏன் கடந்த நான்கு வருடமாக விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க வில்லை? என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக ரசிகர்களுக்கு இருந்து வந்திருக்கும் போல.

சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டார். அதற்கு ரம்யா, இதுவரை செய்யாத புதுவிதமான நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் ரீ-என்ட்ரி கொடுக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றும், அதனாலேயே விஜய் டிவியை விட்டு கொஞ்சம் விலகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

vj-ramya-instagram

vj-ramya-instagram

ரம்யா கூறியதை பார்க்கும்போது விரைவில் விஜய் டிவியில் ஏதாவது ஒரு இன்ட்ரஸ்டிங் நிகழ்ச்சி மூலம் ரீ என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் ரம்யாவுக்கு வரவேற்பு எப்படியோ தெரியாது, ஆனால் சின்னத்திரையில் ரம்யாவுக்கு நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top