Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல்வன் படத்தில் விஜய் நடிக்காமல் போக இவர்தான் காரணமாம்.. வில்லங்கம் கூடவே இருக்கு என கவலைப்பட்ட தளபதி
தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரமாண்டங்களை கூட்டி ரசிகர்களை ரசிக்க வைத்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறார்.
சாதாரண கதையை கூட தன்னுடைய பிரம்மாண்டத்தால் மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுப்பதில் கில்லாடிதான். அப்படி சங்கர் இயக்கியதில் மாஸ்டர்பீஸ் திரைப்படம் என்றால் அது முதல்வன் திரைப்படம்.
1999 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி முதல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ரஜினிக்காக எழுதிய இந்த கதையில் அவர் நடிக்க மறுக்க பின்னர் இதே கதை தளபதி விஜய்க்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
அங்குதான் விதி விளையாடி உள்ளது. தளபதி விஜய்க்கு பதிலாக அந்த கதையை அவரது தந்தை சந்திரசேகர் கேட்டுள்ளார். அதேபோல் சந்திரசேகரிடம் அந்த கதையை சங்கர் கூறாமல் அவரது உதவி இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.
சந்திரசேகருக்கும் அந்த உதவி இயக்குனருக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து இருந்த நிலையில் இந்த கதையைக் கேட்டும் கேட்காமல் நிராகரித்து விட்டாராம் சந்திரசேகர். பின்னர் அந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விட்டது. இந்த தகவலை சங்கர் சமீபத்தில் கூறினார்.
ஏற்கனவே தனது மகனை முதல்வராகி பார்க்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் சந்திரசேகர் அந்த படத்தை தவற விட்டதால் மிகவும் வருத்தப்பட்டாராம். இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தின் கதை தளபதி விஜய்யிடம் முழுமையாக சொல்லப்படவில்லை என்கிறார்கள்.
ஒருவேளை இந்த கதையை தளபதி விஜய் நேரடியாக கேட்க சங்கர் நேரடியாக கூறியிருந்தால் இந்த பிளாக்பஸ்டர் கூட்டணி சரித்திர சாதனை படைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
