Tamil Cinema News | சினிமா செய்திகள்
2 வருடத்திற்கு முன்பே கூட்டணி சேர வேண்டிய பா ரஞ்சித், விஜய்.. டிராப் ஆக காரணம் தளபதி தானாம்!
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் பா ரஞ்சித். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கினார்.
அதுமட்டுமில்லாமல் பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், அட்டகத்தி போன்ற படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை எனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
சார்பட்டா பரம்பரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் செம வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ள பா ரஞ்சித், விஜய்க்கு கதை சொல்லி அவர் நிராகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பணியாற்றிய பா ரஞ்சித் அதன்பிறகு தளபதி விஜய்யுடன் ஏன் இன்னும் பணியாற்ற வில்லை என்ற கேள்வி அவரை சுற்றுவது ஒன்றும் புதிதல்ல.
காலா படத்திற்கு பிறகு தளபதி விஜய்யை சந்தித்து பா ரஞ்சித் ஒரு கதையை கூறினாராம். அதுவும் முழுக்க முழுக்க சூப்பர் ஹீரோ கதையாம். ஏற்கனவே தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ கதைகள் பெரும்பாலும் தோல்வியைத்தான் சந்தித்துள்ளன. கதை நன்றாக இருந்தாலும் சில வருடங்கள் கழித்து இதை செய்யலாம் என தளபதி விஜய் கூறி அனுப்பிவிட்டாராம்.
இருந்தாலும் பா ரஞ்சித் மற்றும் விஜய் கூட்டணியில் ஒரு படம் வெளிவந்தால் அந்த படம் கண்டிப்பாக வசூல் சாதனை புரியும். இந்த தகவலை பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். பா ரஞ்சித் தற்போது இயக்கத்தை விட தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vijay-pa-ranjith-cinemapettai
விஜய் மற்றும் பா ரஞ்சித் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறுமா? என்பதை ரசிகர்கள் கமெண்ட்டில் பதிவு செய்யலாம்.
