வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் இதுவரை சினிமாவில் தோல்வி கொடுக்காத வெற்றி கூட்டணியாக வலம்வருகின்றனர்.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் வெளியாகி அனைத்துமே பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன. இதில் ஆடுகளம் படத்திற்கு மட்டும் தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உண்டு.
ஆனால் ஆடுகளம் படம் வெளியானபோது முதல் பாகம் சூப்பராக இருப்பதாகவும் இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் கருத்துக்கள் வெளியானது. இதை வெற்றிமாறனே ஒரு பேட்டியில் ஓப்பனாக தெரிவித்திருந்தார். பலருக்கும் இரண்டாம் பாதி புரியவில்லை என்பது போன்ற கருத்துகள் வெளிவந்ததாக கூறியிருந்தார்.
மேலும் ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் பலரும் அந்த படத்தை விட்டு வெளியேறியது பெரும் பின்னடைவாக அமைந்தது. அதிலும் குறிப்பாக நாயகி வேடத்தில் திரிஷா 4 நாட்கள் நடித்து விட்டு பின்னர் படத்தில் இருந்து விலகினார்.
ஆடுகளம் படத்தில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவருமே திரிஷாவை நாயகியாக நடிக்க வைக்கத்தான் முடிவு செய்தனர். பின்னர் திரிஷாவிடம் பேசிய நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அதன்பிறகு திரிஷாவுக்கு மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மூலம் ஹாலிவுட் பட வாய்ப்பு வந்ததாம்.
இதன் காரணமாக பாலிவுட்டுக்கு நடிக்க செல்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆடுகளம் படத்திற்கு சரியான நேரத்திற்கு வராமல் இழுத்தடித்தாராம். இதனால் படமும் குறித்த நேரத்தில் வெளியாகாது என தயாரிப்பாளரிடம் கூற உடனடியாக மாற்றி விட்டார்களாம்.

பாலிவுட் பட ஆசையில் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்டு விட்டோமே என பின்னர் வருத்தப்பட்டாராம் திரிஷா. த்ரிஷாவுக்கு பதிலாக ஆடுகளம் படத்தில் நடித்த டாப்ஸியை இன்றும் தமிழ் ரசிகர்கள் வெள்ளாவி அழகி என கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.