Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-hari-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முரண்டு பிடித்த ஹரி.. சரிதான் போயா என விரட்டி விட்ட சூர்யா

சூர்யா மற்றும் ஹரி ஆகியோரின் கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அதுமட்டுமில்லாமல் சூர்யாவின் வளர்ச்சியில் ஹரியின் பங்கு மிகப்பெரியது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட சூர்யாவையே ஹரி கடுப்பாகி உள்ள செய்திதான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சூர்யா மற்றும் ஹரி ஆறாவது முறையாக கூட்டணி அமைக்க இருந்த படம்தான் அருவா. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இமான் இசையில் இந்த படம் உருவாக இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

ஆனால் திடீரென அந்தப் படம் டிராப் ஆனதாக செய்திகள் பரவத் தொடங்கின. அதற்கு காரணம் ஹரி, சூர்யாவிடம் சரியான முறையில் கதை கூறாமல் சொதப்பியது தானாம்.

சூர்யா ஹரி படத்தில் நடிக்கலாம் என முடிவெடுத்த பிறகு ஹரியை அழைத்து கதையை கேட்டுள்ளார். ஆனால் பாதி கதைக்கு மேல் ஹரியால் சரியான முறையில் கதை சொல்ல முடியவில்லையாம்.

அதுமட்டுமில்லாமல் வழக்கமான கதை போலிருக்கிறதே என சூர்யா சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு மூன்று முறை கதை சொல்லச் சென்ற போதும் இரண்டாம் பாதியில் தடுமாற்றங்கள் நிலவியதால் சூர்யா இந்த கதை வேண்டாம் என்று சொல்வதற்கு பதிலாக இன்னும் கொஞ்சம் மாற்றம் கொண்டுவரலாம் என தெரிவித்தாராம்.

ஆனால் ஹரி, ஐந்து ஹிட் படங்களைக் கொடுத்தும் என் மீது நம்பிக்கை இல்லையா என சட்டென கிளம்பி விட்டாராம். மேலும் அருவா படத்திற்காக சுமார் ஒரு கோடிக்கும் மேல் அவருக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சூர்யா பெருந்தன்மையாக அதை கேட்க வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். ஆனால் சூரரைப்போற்று விவகாரத்தில் சூர்யாவுக்கு எதிராக ஹரி அறிக்கை விட்டது சூர்யாவுக்கு சங்கடத்தை கொடுத்து விட்டதாம்.

இனி சூர்யா-ஹரி கூட்டணியில் ஒரு படம் உருவாக வாய்ப்பே கிடையாது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர்.

Continue Reading
To Top