Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் மேடையில் கதறிக் கதறி அழுததற்கு காரணம் இதுதான்! உண்மையைச் சொன்ன தயாரிப்பாளர்!
தமிழ் சினிமாவில் மிக விரைவில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட ஏழு வருட காலங்களில் தற்போது 15 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் தன்னுடைய படங்களில் பெரும்பாலும் தண்ணி அடிக்கும் காட்சிகள், டபுள் மீனிங் காமெடிகள் போன்றவற்றை தவிர்த்து விடுவதால் குடும்ப ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும்.
அந்த வகையில் அவ்வப்போது சறுக்கல்களை சந்தித்தாலும் தனது தவறை சுதாரித்துக்கொண்டு அடுத்ததாக ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்து வெற்றி பெற்றுவிடுவார்.
அப்படித்தான் வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் போன்ற சுமாரான படங்கள் கொடுத்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் இடையில் நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தை கொடுத்து மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்து கொண்டார்.
இப்படியிருக்கும் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தின் வெற்றி விழாவில் மேடையில் கதறி கதறி அழுவததற்கு காரணம் என்னவென்று தெரியாமல் இருந்தது. அதை தயாரிப்பாளர் ரவீந்திரன் என்ன பிரச்சினை என்பதை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இல்லை என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள் தன்னை விட வேறு யாரும் முன்னணிக்கு வந்து விட்டால் அவர்களுக்கு வயிற்று எரிச்சல் அதிகமாகி விடும்.
சிவகார்த்திகேயன் முதன் முதலில் கார் வாங்கியது முதல் வீடு வாங்கியது வரை அனைத்திலுமே அவர் மீது ஒரு பொறாமை ஏற்பட்டு அவரை சினிமாவை விட்டு ஒதுக்க பல வேலைகள் நடந்தது. இருந்தாலும் அதையெல்லாம் கடந்து தற்போது அசைக்க முடியாத உயரத்திற்கு சென்று விட்டார் என கூறியுள்ளார்.
