Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோ படத்திலிருந்து சிம்பு வெளியேற காரணமே அந்த நடிகைதான்.. 10 வருடத்திற்கு பிறகு வெளிவந்த உண்மை

தமிழ் சினிமாவில் அறிமுகமான வாரிசு நடிகர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தயாரிப்பாளர்களை ஒரு காலத்தில் படாதபாடு படுத்திய சிம்பு தற்போது அதே தயாரிப்பாளர்களிடம் சமர்த்துப் பிள்ளையாக நடந்து கொள்வது அனைவருக்கும் பிடித்துப் போய் ஏகப்பட்ட பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மாநாடு படம் வெளியாக உள்ளது. அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவான கோ படத்தில் சிம்பு நடித்த சில காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜீவாவுக்கு பதிலாக சிம்புவே நடித்திருக்கலாம் என்ற கருத்துக்களும் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன.

ஆம். கே வி ஆனந்த் முதலில் கோ படத்தின் கதையை சிம்புவிடம் தான் சொன்னார். சில நாட்கள் அந்த படத்தில் நடித்து விட்டு சிம்பு ஏன் விலகினார் என்ற காரணம் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது விடை கிடைத்துள்ளது. அந்த படத்திலிருந்து சிம்பு விளங்குவதற்கு காரணம் பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா தானாம்.

சிம்பு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா போன்ற ஹீரோயின்களை எதிர்பார்த்து அந்த படத்தில் நடித்தாராம். ஆனால் திடீரென அறிமுக நடிகை என்றதும் சில நாட்கள் தலையெழுத்தே என்று நடித்துவிட்டு பின்னர் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று விலகி விட்டதாக கூறுகின்றனர். சிம்பு மட்டும் அன்று கொஞ்சம் விட்டுக்கொடுத்து கோ படத்தில் நடித்திருந்தால் இன்று விட்டுப்போன தன்னுடைய மார்க்கெட்டை மீட்டெடுக்க போராடிக் கொண்டிருக்கமாட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

simbu-ko-movie-02

simbu-ko-movie

Continue Reading
To Top