Connect with us
Cinemapettai

Cinemapettai

இயக்குனர் பாக்யராஜின் மகள் திருமணம் செய்துகொள்ளாத காரணம் தெரியுமா? இந்தக் காலத்துல இப்படி ஒரு பொண்ணா!

saranya-bhakkiyaraj-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இயக்குனர் பாக்யராஜின் மகள் திருமணம் செய்துகொள்ளாத காரணம் தெரியுமா? இந்தக் காலத்துல இப்படி ஒரு பொண்ணா!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக காலம் கடந்தும் தனித்து நிற்பவர் இயக்குனர் நடிகர் பாக்கியராஜ். இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா கொண்டாடியவை.

அதுமட்டுமில்லாமல் இந்திய சினிமாவுக்கே நம்பர் ஒன் கதாசிரியராக விளங்கியவர். இவர் நடிகை பூர்ணிமா வைத்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.

சரண்யா பிரபல நடிகர் பிருத்விராஜுடன் சேர்ந்து பாரிஜாதம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு இருவருக்குள்ளும் கிசுகிசு இருப்பதாக செய்திகள் வெளியானது.

வதந்தி என தெரிந்தும் தற்போதுவரை சரண்யா ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதன் காரணம் கேட்டு அதிர்ந்து போய் உள்ளனராம் சினிமாவை சேர்ந்தவர்கள்.

சரண்யா ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இந்தியர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், திடீரென அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டாராம்.

பிறகு பாக்கியராஜ் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அவரை அதிலிருந்து மீட்டு தற்போது வெளிநாட்டில் படிக்க வைத்து வருகிறாராம். இருந்தும் காதல் தோல்விக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என உறுதியாக இருக்கிறாராம் சரண்யா.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top