Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஷ்மிகா மந்தனா பிரபல நடிகரான காதலரை பிரிந்ததற்கு இதுதான் காரணமாம்.. நிச்சயம் முடிந்தும் இப்படியா!
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவை ஆட்சி செய்து வருகிறார்.
படத்துக்கு படம் அவரது ரசிகர் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. சமூக வலைதளங்களில் இவருக்கு இருக்கும் வரவேற்பு வேறு எந்த நடிகைக்கும் இல்லாத அளவுக்கு இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட ரஷ்மிகா மந்தனா தன்னுடன் நடித்த பிரபல நடிகர் ஒருவரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்ற திருமணத்தை நிறுத்திய செய்தி பலருக்கும் தெரியாது.
ரஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ரக்ஷிட் ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிவு செய்யப்பட்டது.
திருமண தேதிகள் குறித்த நிலையில் திடீரென ரஷ்மிகா மந்தனா தன்னுடைய கல்யாணத்தை நிறுத்தி விட்டாராம். அதற்கு காரணம் அந்த நடிகர் தன்னிடம் இப்போதே தேவையில்லாத கேள்விகளைக் கேட்பதாக குற்றம் காட்டினாராம்.
மேலும் நடத்தையில் சந்தேகப்பட்ட தாகவும் கூறியுள்ளார். ஆனால் உண்மையில் ரஷ்மிகா மந்தனா தனக்கு தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த பிறகு அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள திருமணத்தை தடுத்து நிறுத்தி விட்டாராம்.
இது புரியாத சில ரசிகர்கள் அந்த நடிகரை சமூக வலைதளங்களில் பலமுறை திட்டி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது உண்மை தெரிய வந்த நிலையில் ரஷ்மிகா மந்தனா மீதான மரியாதை குறைந்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
