Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரம்யா பாண்டியனுக்கு கொரானாவா? எதற்காக தனிமைப்படுத்தப் பட்டுள்ளார் என கவலையில் ரசிகர்கள்
ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அந்த படங்களில் நடித்தபோது இல்லாத வரவேற்ப்பு தற்போது ரம்யா பாண்டியனுக்கு கிடைத்துள்ளது.
அதற்கு காரணம் விஜய் டிவி அவரை குத்தகைக்கு எடுத்துள்ளது தான். குக் வித் கோமாளி தொடர்ந்து தற்போது வரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென ரம்யா பாண்டியன் தனிமைப் படுத்தப்பட்டுள்ள செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அதற்கு காரணம் தெரியாமல் ரசிகர்கள் பயங்கர குழப்பத்தில் இருக்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு வரை விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருக்கு திடீரென என்ன ஆனது என புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
அது ஒன்றும் இல்லை. தன்னுடைய மொத்த வித்தையும் காட்டுவதற்காக விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.
அதற்காகத்தான் தற்போது ரம்யா பாண்டியன் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அனேகமாக இந்த சீசனில் ரம்யா பாண்டியன் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.
