Tamil Cinema News | சினிமா செய்திகள்
40 வருடமாக பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்காத சூப்பர் ஸ்டார் ரஜினி.. காரணம் இதுதான்!
தமிழ் சினிமாவில் 40 வருடமாக நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்களுடன் சரிசமமாக வசூலில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் ஒரு கால கட்டங்களில் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டவர் பாக்கியராஜ். 80, 90களில் பாக்கியராஜ் படங்கள் வெளியாகும்போது அப்படி ஒரு வரவேற்பு இருக்குமாம்.
முதலில் எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குனராக சூப்பர்ஹிட் படங்களை எல்லாம் கொடுத்தவர் பாக்கியராஜ். ஒரு கட்டத்தில் தானே படம் இயக்கி நடிக்கவும் ஆரம்பித்தார்.
பாக்யராஜ் படங்களுக்கு பெண்களின் கூட்டம் ஆண்கள் கூட்டத்தை விட அதிகமாக இருக்குமாம். அப்படிப்பட்ட பாக்கியராஜ் படங்களில் ரஜினிகாந்த் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

rajini-bhagyaraj-cinemapettai
அதற்கு காரணம் ரஜினியை வைத்து தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த எஸ்பி முத்துராமன் தான். தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்ததால் மற்ற இயக்குனர்களை ரஜினிகாந்த் தேடி செல்லவில்லையாம்.
ஒருவேளை எஸ்பி முத்துராமன் ஒரு சில படங்கள் தொடர்ந்து தோல்விகள் கொடுத்திருந்தால் ரஜினி மற்ற இயக்குனர்களை தேடிச் சென்றிருப்பார். இதற்கு இடையிலும் பாக்கியராஜ் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பு வந்ததாம்.
ஆனால் எதிர்பாராத சூழ்நிலையில் அது கைவிடப்பட்டது. இருந்தாலும் அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற சில படங்களில் பாக்கியராஜ் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
