fbpx
Connect with us

Cinemapettai

லோகேஷ் கனகராஜ் படத்தில் கமல், ரஜினியை கழட்டிவிட்டது ஏன்? காரணம் இதுதான்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் படத்தில் கமல், ரஜினியை கழட்டிவிட்டது ஏன்? காரணம் இதுதான்!

லோகேஷ் கனகராஜ் படத்தில் கமலஹாசன் நடிக்க உள்ள செய்தி தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதால் குருவை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதனால் இந்த படம் எந்த மாதிரி வரப்போகிறது என இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி உள்ளன.

இது ஒருபுறமிருக்க லோகேஷ் கனகராஜ் படத்தில் முதலில் ரஜினி நடிக்க இருந்த நிலையில் ஏன் திடீரென விலகினார் என்ற செய்தி தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கமல் ஹாசன் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனால்தான் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி ஒரு படம் நடிக்க இருந்தார்.

என்னதான் நண்பராக இருந்தாலும் ரஜினிகாந்த் அவரிடம் 100 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டதாக தெரிகிறது. கமல் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ரஜினிகாந்த் கேட்ட சம்பளம் கிடைக்காததால் இந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை என தெரிவித்து விட்டாராம்.

அதனால்தான், ரஜினி இல்லை என்றால் என்ன, நானே நடிக்கிறேன் என கோதாவில் குதித்துள்ளார் கமலஹாசன். ஏற்கனவே மார்க்கெட் இல்லாமல் தள்ளாடும் கமலஹாசனுக்கு லோகேஷ் கனகராஜ் படம் பயங்கரமாக கைகொடுக்கும் என தெரிகிறது.

எது எப்படியோ, தனக்கு காசுதான் முக்கியம் என்பதை ரஜினி சொல்லாமல் சொல்லி விட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனால் அந்த படத்தை கமல் சொந்த தயாரிப்பில் தயாரிக்காமல் ஒரு சில இணை தயாரிப்பாளர்கள் உடன் சேர்ந்ததால் தான் ரஜினி விலகியதாகவும் ஒரு செய்தி உலா வருகிறது.

Continue Reading
To Top