இத பண்ணலனா இன்னும் 100 வருஷமானாலும் தியேட்டருக்கு மக்கள் வர மாட்டாங்க.. என்ன நான் சொல்றது சரிதானே!

ஊரடங்கு சமயத்தில் நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம் என்றால் மக்கள் அனைவரும் தியேட்டர்களை புறக்கணித்துவிட்டு டிவியில் நேரடியாக புதிய படங்களை பார்க்க ஆரம்பித்தது தான். இதைப் படிக்கையில் தியேட்டர்காரர்களுக்கு கடுப்பானாலும் இதுதான் இன்றைய நிலைமை.

ஊரடங்கு சமயத்தில் தியேட்டர்கள் முற்றிலும் மூடப்பட்டதால் அந்த காலகட்டங்களில் வெளியான புதிய படங்கள் அனைத்தையும் மக்கள் தங்களுடைய வீட்டிலேயே இருந்து சௌகரியமாக பார்த்து பழகி விட்டனர். இதையும் மீறி மக்கள் தியேட்டருக்கு வர வேண்டுமென்றால் முன்னணி நடிகர்களின் படங்கள் தான் ஒரே வழி.

அதுவும் வருடத்திற்கு ஐந்து முதல் பத்து படங்கள் என கணக்கு போட்டால் மற்ற நேரங்களில் தியேட்டர்களில் காற்றுதான் வாங்குகிறது. இந்த சமயத்திலும் தியேட்டர்காரர்கள் மக்களைப்பற்றி யோசிக்காமல் சுயலாபத்திற்காக பல வேலைகளை செய்து வருகின்றனர். முன்னரெல்லாம் ஐந்து ரூபாய் டிக்கெட் இருந்தபோது மக்கள் நிம்மதியாக தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து வந்தனர்.

இப்போது டிக்கெட் விலை அதிகமானது கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அதைவிட தியேட்டர்களில் விற்கும் தின்பண்டங்களில் விலையும் அதிகம் ஆகிவிட்டதே. வெளியில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் பாப்கார்ன் பாக்கெட் தியேட்டரில் 150 முதல் 200 வரை விற்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் காபி, ஐஸ்க்ரீம் போன்றவற்றை கணக்குப் போட்டால் அப்பப்பா. ஒரு சராசரி மிடில் கிளாஸ் குடும்பம் எப்படி குடும்பத்துடன் தியேட்டரில் படம் பார்க்க முடியும்.

சராசரியாக ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றால் ஆயிரம் ரூபாய் ஆகிறது. அதுவும் இந்த ஊரடங்குக்கு பிறகு இஷ்டத்திற்கு தியேட்டர்களில் விலையை ஏற்றி விட்டார்கள். போதாக்குறைக்கு பார்க்கிங் கட்டணம் வேறு. இப்படி நாளுக்கு நாள் தியேட்டர்காரர்கள் தங்களது சுயலாபத்திற்காக ஒவ்வொரு கட்டணத்தையும் அதிகரித்தால் மக்கள் அலட்டிக்கொள்ளாமல் ஓடிடி தளங்களுக்கு வருடத்திற்கு 500 ரூபாய் கட்டி புதிய படங்களை வீட்டிலேயே பார்த்துக்கொள்ளதான் நினைப்பார்கள்.

theaters-cinemapettai
theaters-cinemapettai

தியேட்டர்களில் விலைகளை குறைத்தால் மட்டுமே இனி தியேட்டருக்கு மக்கள் வருவார்கள் என்பதை தொடர்ந்து சமூக வளைதளத்தில் அவர்கள் பதிவிடும் கருத்துக்கள் மூலம் அறியமுடிகிறது. மக்களுக்கு சவுகரியமாக இல்லாத விஷயத்தை அவர்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இந்த ஊரடங்கு உணர்த்திவிட்டது. இனியாவது மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு தியேட்டர்காரர்கள் தேவையில்லாத கட்டணங்களை குறைப்பார்களா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்