fbpx
Connect with us

Cinemapettai

பிரசாந்த் படத்தை மோகன்ராஜா ஒதுக்க இவர்தான் காரணமாம்! கூடவே இருந்து குழிபறித்த சொந்த ரத்தம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரசாந்த் படத்தை மோகன்ராஜா ஒதுக்க இவர்தான் காரணமாம்! கூடவே இருந்து குழிபறித்த சொந்த ரத்தம்

பிரசாந்த் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த அந்தாதூன் பட ரீமேக்கில் இருந்து மோகன்ராஜா விலகியது அவருக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளதாம்.

நீண்ட காலமாகவே தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என ஏங்கிக் கொண்டிருப்பவர் டாப் ஸ்டார் பிரசாந்த்.

ஒரு காலத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்ட பிரசாந்த் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் ஆகிவிட்டார்.

இந்நிலையில் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க முடிவெடுத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரீமிக்ஸ் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் மோகன் ராஜா தான் இயக்குனர் என முடிவு செய்தார்.

andhadhun-tamil-remake

andhadhun-tamil-remake

எல்லாம் கைகூடி வரும் நேரத்தில் அந்த படத்தை தயாரிக்கும் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் படம் சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் தொடர்ந்து மூக்கை நுழைத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மோகன் ராஜா அந்த படத்திலிருந்து விலகுவதாக கூறிவிட்டாராம். மேலும் மோகன்ராஜா கிட்டத்தட்ட ஒரு கோடி அட்வான்ஸ் வாங்கியுள்ளார்.

தொடர்ந்து அந்த அட்வான்ஸ் பணத்தை கேட்டு அவரை டார்ச்சர் செய்து வருவதாகவும் தெரிகிறது. எப்படியாவது அவரை சமாதானம் செய்து கூட்டி வரலாம் என நினைத்திருந்த பிரசாந்த் கனவில் மண்ணைப் போட்டு விட்டாராம் அவரது தந்தை தியாகராஜன்.

Continue Reading
To Top