Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரசாந்த் மிஸ் பண்ணிய மோகன் ராஜா படம்.. கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்
பிரசாந்த் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த அந்தாதூன் பட ரீமேக்கில் இருந்து மோகன்ராஜா விலகியது அவருக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளதாம்.
நீண்ட காலமாகவே தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என ஏங்கிக் கொண்டிருப்பவர் டாப் ஸ்டார் பிரசாந்த்.
ஒரு காலத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்ட பிரசாந்த் தற்போது நல்ல வெற்றிக்காக காத்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க முடிவெடுத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரீமேக் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் மோகன் ராஜா தான் இயக்குனர் என முடிவு செய்தார்.

andhadhun-tamil-remake
ஆனால் மோகன் ராஜாவுடன் ஏற்பட்ட சில மன கஷ்டங்களால் அந்த படத்திலிருந்து விலகுவதாக கூறிவிட்டாராம். மேலும் மோகன்ராஜா கிட்டத்தட்ட ஒரு கோடி அட்வான்ஸ் வாங்கியுள்ளார் எனவும் செய்திகள் வந்தது.
எப்படியாவது அவரை சமாதானம் செய்து கூட்டி வரலாம் என நினைத்திருந்த பிரசாந்த் கடைசி நேரத்தில் வேண்டாம் என முடிவு செய்துவிட்டாராம்.
ஆனால் உண்மையில் பிரசாந்த் தந்தை தியாகராஜனுக்கும் மோகன் ராஜாவுக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை எனவும், வேண்டுமென்றே கிளப்பபட்ட வதந்தி எனவும் பிரசாந்த் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
