Tamil Cinema News | சினிமா செய்திகள்
லட்சுமி மேனன் தமிழ் சினிமாவை விட்டு ஓட்டம் பிடிக்க இந்த நடிகர் தான் காரணமாம்.. சும்மாவே இருக்க மாட்டாரு போல!
தமிழ் சினிமாவில் அதுவரை வந்த மலையாள நாயகிகளில் லட்சுமிமேனன் அளவுக்கு ஆரம்ப காலகட்டங்களில் பெரிய அளவில் புகழ் அடைய வில்லை. முதல் படத்திலிருந்து வெற்றி நாயகியாக வலம் வந்தார்.
லட்சுமி மேனன் தமிழில் அறிமுகமான சுந்தரபாண்டியன் என்ற முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த கும்கி படம் அவரை வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்றது.
ஹிட் நடிகை என்றால் சும்மா விடுவார்களா. தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொட்டித் தீர்த்துவிட்டார்கள். இத்தனைக்கும் அந்த படங்களில் நடிக்கும்போது அவர் பள்ளியில் தான் படித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லட்சுமிமேனன் நடித்த குட்டிப் புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், கொம்பன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, வேதாளம், மிருதன் போன்ற அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் அடித்த படங்கள்.
பாண்டிய நாடு படத்தில் நடிகர் விஷாலுடன் ஜோடி போட்டார் லட்சுமி மேனன். அவர்களது ஜோடிப்பொருத்தம் அருமையாக இருப்பதாக தமிழ் சினிமாவில் பரப்பிவிட்டனர். அதன் விளைவாக தொடர்ந்து அடுத்த படமான நான் சிகப்பு மனிதன் படத்திலும் அவருடன் ஜோடி போட்டார்.
பாண்டியநாடு படத்திலேயே இருவருக்குள்ளும் ரொமான்ஸ் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகத்தான் நான் சிவப்பு மனிதன் படத்தில் உதட்டு முத்தக் காட்சியில் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்து கொடுத்தாராம் லட்சுமி மேனன்.
அதன்பிறகு இருவரும் காதலித்து சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இதில் துளியும் உண்மை இல்லையாம். இந்த விஷயம் பரவ பரவ லட்சுமிமேனன் இனி இங்கு இருந்தால் சரிப்பட்டு வராது என தனது சொந்த ஊருக்கு கிளம்பி விட்டாராம்.
கடைசியாக அவர் நடித்த ரெக்க என்ற படம் மட்டுமே மிகப்பெரிய தோல்வியை தழுவியது. கைவசம் சில தமிழ் படங்கள் வைத்திருந்தாலும் படப்பிடிப்பு முடிந்தவுடன் உடனடியாக ஃபிளைட் பிடித்து ஊருக்கு சென்றுவிடுகிறாராம்.
