Connect with us
Cinemapettai

Cinemapettai

kovai-sarala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

58 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாத கோவை சரளா.. காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் மிக மிக குறைவு. அன்றிலிருந்து இன்றுவரை ஒரு சில நடிகைகள் மட்டுமே காமெடி மற்றும் குணச்சித்திர ஆகிய இரண்டையும் கலந்து நடித்தவர்கள் ஆவார்கள். அவர்களில் ஒருவர் மனோரமா.

அதற்கடுத்ததாக மனோரமா இடத்தை பெரும்பாலும் பூர்த்தி செய்தவர் நடிகை கோவை சரளா. கமல்ஹாசனுக்கு ஜோடியாக சதிலீலாவதி படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

58 வயது ஆகிய நிலையில் இன்னமும் கோவை சரளா திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையை வீணடித்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அவரோ தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற கவலை ஒரு நாள் கூட இருந்ததில்லை என்பதற்கு பல உதாரணங்கள் கூறி வருகிறார். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 750 படங்களுக்கு மேல் நடித்தவர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

கோவை சரளாவுக்கு உடன் பிறந்த நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மூத்த சகோதரி என்ற பெயரில் திருமணம் செய்து வைத்து அவர்களது குழந்தைகளையும் தற்போது படிக்க வைத்து வருகிறாராம்.

அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில அனாதை ஆசிரமத்திற்கு தன்னால் முடிந்த உதவியை தொடர்ந்து செய்து வருகிறாராம். தன் வாழ்நாள் முழுவதும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதே குறிக்கோள் எனும் அளவுக்கு இருந்து வருகிறாராம்.

தன் சகோதர சகோதரிகளின் மகன்களை தன் மகன் மகளாகக் கருதி அவர்களை வளர்த்து வருகின்றாராம் கோவை சரளா. கரகாட்டக்காரன் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கோவை சரளா அதன்பிறகு வடிவேலுவுடன் ஜோடி போட்டதன் மூலம் பல உச்சத்தை அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top