Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமாவுக்கு வந்த 42 வருடத்தில் மணிரத்னம் படத்தில் நடிக்காத ஆனந்தராஜ்.. காரணம் இதுதான்!
தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம்வந்த ஆனந்தராஜ், சினிமாவுக்கு வந்த 42 ஆண்டுகளில் இதுவரை மணிரத்தினம் படத்தில் நடிக்கவே இல்லையாம்.
90 காலகட்டங்களில் மிகக் கொடூர வில்லனாக தமிழ் சினிமாவை மிரட்டியவர் ஆனந்தராஜ். தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வந்தார்.
மிரட்டல் வில்லனாக வலம் வந்த ஆனந்தராஜ் தற்போது காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் எப்படி கொடிகட்டி பறந்தாரோ அதேபோல் தற்போது காமெடி கதாபாத்திரங்களிலும் பிச்சு உதறுகிறார்.
அப்படிப்பட்ட ஆனந்தராஜ் தற்போது வரை மணிரத்தினம் படத்தில் நடிக்கவில்லை. ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்ததை வேண்டாம் என்று கூறி விட்டாராம்.
1985 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் பகல் நிலவு. இந்த பாடலில் முரளிக்கு நண்பராக முதலில் நடிக்க கேட்டார்களாம். ஆனால் படத்தின் கேமராமேன் முரளி கருப்பு, ஆனந்தராஜ் சிகப்பு எனவும், லைட்டிங் பிரச்சினை வரும் என்று கூறி நிராகரித்து விட்டாராம்.
மேலும் அதே படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க கேட்டதற்கு வேண்டாம் என்று கூறிவிட்டாராம் ஆனந்தராஜ். அதற்குக் காரணம் ஒரு முறை போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டால் தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்களில் தான் வரும் என நண்பர்கள் கூறியதை கேட்டு இப்படி செய்து விட்டாராம்.

anandaraj-cinemapettai
இந்த தகவலை டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும்போது ஆனந்தராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
