fbpx
Connect with us

Cinemapettai

அஜித் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி தான் செய்தார்களா? தல கோபமாக அறிக்கை விட்ட காரணம் இதுதான்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி தான் செய்தார்களா? தல கோபமாக அறிக்கை விட்ட காரணம் இதுதான்!

அடிக்கடி தல அஜித் அறிக்கை வெளியிடுவது சமீபகாலமாக அதிகமாகியுள்ளது. அதற்கு காரணம் அஜித் பெயரில் நிறைய மோசடிகள் நடந்து வருகிறது.

தல அஜித் பெயரை சொல்லி பலவகையில் பலரும் மோசடி செய்து வருகின்றனர். அஜித்திடம் முன்னாள் வேலை செய்த பலர் இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் தல அஜித் தன்னுடைய வக்கீல் சார்பாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தன்னுடைய விஷயங்கள் அனைத்துக்கும் தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டும்தான் பொறுப்பாளர் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவரை தவிர வேறு யாரேனும் அஜித் பெயரை சொல்லிக்கொண்டு வந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

அதற்கு காரணம் சமீபத்தில் தல அஜித் பெயரை சொல்லி ஒரு மிகப்பெரிய கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்துள்ளனர்.

இதே போல் நிறைய தயாரிப்பாளர்கள் மற்றும் சிறு சிறு நடிகர்களிடம் அஜித் பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல வகையில் மோசடி செய்த உள்ளதால் அஜித் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Continue Reading
To Top