Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் இதனால்தான் வெளியில் வருவதில்லை.. உண்மையை போட்டுடைத்த பெண் பைக் ரேசர்
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக மாறியிருக்கிறார். சமீபகாலமாக அஜித் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சமீபகாலமாகத்தான் தல அஜித்தை வெளியில் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவரும் ஒரு காலத்தில் டிவி பேட்டிகள், மேடை நிகழ்ச்சிகள் என அனைத்திலும் கலந்து கொண்டவர்தான்.
சில கசப்பான அனுபவங்களால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தல அஜித் வீட்டை விட்டு அதிகம் வெளியில் வராதது காரணம் தல அஜித்தின் ஆரம்ப காலத்தில் ஆனந்த பூங்காற்றே பட வெற்றி நிகழ்ச்சியில் மீனாவுடன் மேடையில் அஜித்தை ஆடுமாறு தொகுப்பாளர்கள் அழைத்துள்ளனர்.
அதற்கு உடனடியாக மீனாவின் அம்மா, என் மகள் ரஜினி கமலுடன் ஜோடி போட்டவர் எனவும், உன்னுடன் ஆடினால் சரி இருக்காது எனவும் கூறிவிட்டாராம். இந்த செய்தி அப்போதே பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகும் சினிமாவை மதித்து அவ்வப்போது சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
ஏன் கலைஞர் நடத்திய விழாவில் கூட தைரியமாக தன்னுடைய தரப்பு வாதங்களை முன்வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்தான் அஜித் வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை எனவும் பல பேச்சுகள் எழுந்தன.
ஆனால் உண்மையில் தல அஜித் ஏன் வீட்டை விட்டு அதிகம் வெளியில் வரவில்லை என்ற காரணத்தை அஜீத்துடன் பைக் ரேஸ் ஓட்டிய பெண் ஒருவர் கூறியது அஜித் ரசிகர்களின் மனதை சாந்தப்படுத்தியுள்ளது.
தல அஜித் வருகிறார் என தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் இரவு பகல் பாராமல் வெயிலிலும் நின்று கஷ்டப்படுகிறார்கள் என்பதை உணர்ந்துதான் அஜீத் அதிகம் வெளியில் வருவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை அஜித்துடன் ஒருமுறை பைக் ரேஸில் கலந்துகொள்ள சென்றபோது அஜித்தை பார்க்க ஒரு கூட்டம் கூடியதாகவும், அதனால் வருத்தப்பட்ட தல அஜித், தன்னிடம் இதுபோன்று கூறியதாகவும் பிரபல பெண் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா கூறியுள்ளார்.
