Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதெல்லாம் தெரிஞ்சிதான் அஜித் எஸ்கேப்.. கமல் 60ல் தல வராததன் பின்னணி
தமிழ் சினிமாவில் தற்போது யாராலும் அசைக்க முடியாத உயரத்தில் உள்ளவர் தல அஜித். இவர் படங்கள் வெளியாகும் நாட்களில் தமிழ்நாடே தல நாடாக மாறிவிடும். அந்த அளவு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்.
ரசிகர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு ரசிகர் மன்றங்களை கலைத்தவர். அவரது நல்ல குணத்திற்காகவே இங்கு பல பேர் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளை கடந்த கமல்ஹாசனை பாராட்டும் வகையில் உங்கள் நான் எனும் பெயரில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
அதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல அஜித் கலந்து கொள்ளாமல் ரசிகர்களை அதிருப்தி செய்தார். ஏன் என விசாரித்தபோது, தல அஜித் அவர்களின் தந்தை தற்போது உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
மேலும் கமல் 60 நிகழ்ச்சி முழுவதும் அரசியல் கலந்த பேச்சுகள் அதிகம் இடம்பெறும் என்பதை முன்னாடியே அறிந்து அதில் ஈடுபாடு இல்லாமல் கூட தல வராமல் இருந்திருக்கலாம் என ரசிகர்கள் கூட்டம் ஒரு பக்கம் வினவி கொண்டுள்ளனர்.
