Connect with us
Cinemapettai

Cinemapettai

abbas

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சொகுசு வாழ்க்கையால் சினிமாவை இழந்த அப்பாஸ்.. நல்லா வரவேண்டியவர் வீணாப்போனதுக்கு இதுதான் காரணம்!

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் அந்தஸ்தில் இருந்த சில நடிகர்களில் குறிப்பிட வேண்டியவர் அப்பாஸ். ஆரம்பத்தில் கவனிக்கப்படும் நடிகராக வலம் வந்தவர் ஒரு கட்டத்திற்கு பிறகு சினிமாவை விட்டே காணாமல் போய் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

அன்று முதல் இன்று வரை சாக்லேட் பாய் ஹீரோக்களுக்கு எப்போதுமே இளம் ரசிகைகள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கும். அப்படிப்பட்ட வரவேற்பு அப்பாஸுக்கும் கிடைத்தது. ஆனால் அதை அவர் பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இரண்டாம் கட்ட ஹீரோவாகவே பல படங்களில் நடித்தார். மேலும் வெளிநாட்டு மாப்பிள்ளை போன்ற கதாபாத்திரங்களில் சினிமாவில் நடித்தால் போதும் என்கிற ரேஞ்சுக்கு வலம் வந்தார். அவர் சினிமாவை இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொண்டதற்கு காரணம் அவர் அடிப்படையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம்.

இரவு நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு நடுரோட்டில் பார்ட்டி செய்வது, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அதில் கவனம் செலுத்தியதால் சினிமாவை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே மார்க்கெட்டை இழந்தார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

அது மட்டுமில்லாமல் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்து முன்னணி நடிகராக வளர வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் கிடைத்த கதாபாத்திரம் நடித்தால் போதும், வரும் வருமானம் வரும் என இருந்து விட்டாராம். அப்பாஸ் இதுவரை ஒரு ஏழை வீட்டு பையன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் இப்போது மிகவும் வருத்தப் படுகிறாராம். ஒரு காலத்தில் சாக்லேட் பாய் நடிகராக வந்தவர் தற்போது பாத்ரூம் விளம்பரத்தில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார். ஏதாவது ஒரு வகையில் மக்களிடம் வரவேற்பு கிடைக்காதா என்கிற ஏக்கம் தானாம்.

abbas-latest-cinemapettai

abbas-latest-cinemapettai

Continue Reading
To Top