Connect with us

Cinemapettai

தளபதியை சுற்றும் அரசியல்.. நேக்கா எஸ்கேப் ஆன விஜய்

kamal-vijay-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதியை சுற்றும் அரசியல்.. நேக்கா எஸ்கேப் ஆன விஜய்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார். இவரது படங்கள் செய்யும் வசூலைக் கண்டு தமிழ் திரையுலகமே வியந்து உள்ளது. விடா முயற்சி என்பதன் மறு உருவமாக உள்ளார்.

தமிழ் சினிமாவில் குடும்பம் குடும்பமாக ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். ஆனால் தளபதி விஜய்யை சுற்றி எப்போதும் அரசியல் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவரது பட வெளியீட்டின்போது அரசியல் தலையீடுகள் அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தலைவா படத்தை தடை செய்ததை எல்லாம் மறக்க முடியுமா. மேலும் சர்கார் பட வெளியீட்டின்போது சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்கள் தியேட்டரில் புகுந்து ரகளை செய்தது உலகம் அறிந்த விஷயமாகும்.

இந்நிலையில் தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதன் காரணமாகவே கமல்60 நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்கிறது சினிமா வட்டாரம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top