Connect with us

Cinemapettai

தீபாவளிக்கு பிகில் அடிப்பாரா விஜய்? முடிவு எடப்பாடியார் கையில்

vijay-edappadi

Cinema News | சினிமா செய்திகள்

தீபாவளிக்கு பிகில் அடிப்பாரா விஜய்? முடிவு எடப்பாடியார் கையில்

சமீபகாலமாக தளபதி விஜய் வாயை திறந்தாலே அதை அரசியலாக்கி விடுகிறார்கள். அதனால் அவருக்கும் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பெரும் பிரச்சினையாகி விடுகிறது. தலைவா படத்தின் போது படத் தலைப்பிலேயே நேரடியாக ஆளுங்கட்சியான ஜெயலலிதாவை நேரடியாகவே எதிர்த்து இருந்தார். இதனால் அந்த படம் ரிலீஸ் ஆகாமல் இணையதளங்களில் வெளியாகி மேற்கொண்டு ஒரு வாரம் கழித்து ரிலீஸ் ஆனது அனைவரும் அறிந்த கதை.

இதனால் சிறிது காலம் அரசியல் வேண்டாம் என்று முடிவெடுத்து படங்களில் நடிப்பதை மட்டும் செய்துவந்தார் தளபதி விஜய். ஜெயலலிதா அம்மையாரின் மறைவுக்குப் பிறகு தளபதி விஜய்யின் பேச்சிலும் செயலிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தனது படத்திற்கு நடத்தப்படும் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் அரசியல்வாதிகளை நேரடியாக தாக்கி பேசி வருகிறார். இதனால் ஆளும் கட்சி கடும் கோபத்தில் உள்ளது.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பொதுப்படையாக பேசி இருந்தாலும் அதனை அரசியலாக பார்க்கும் அரசியல்வாதிகள், பிகில் படத்திற்கு எதிராக சதி செய்து வருகின்றனர். அதாவது படத்தின் சென்சார் பட்டியலில் பிகில் திரைப்படம் இன்னும் இடம்பெறவில்லை. விநியோகஸ்தர்களும் சென்சார் போர்டு அதிகாரிகளும் ஆளும் கட்சியை பகைத்துக் கொள்ளாமல் இருப்பதற்காக அவர்கள் சொல்லியபடி தலையாட்டி வருகின்றனர்.

இதனால் கடும் அதிருப்தியில் இருந்த தளபதி விஜய் ரகசியமாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்திக்க இருப்பதாகவும், மேலும் இது போன்ற அரசியல் பேச்சுகள் இனி என்னுடைய படங்களில் இருக்காது எனவும் உறுதி அளிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ப்ரொடியூசர்களின் நிலைமை கருதியே இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top