செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

PVR சினிமாஸின் ரகசியம்.. அடடே இதுக்குள்ள இவ்வளவு அர்த்தமா?

PVR-க்கு போயி, வார இறுதியில் படம் பார்ப்பது தான் இன்றைய தேதிகளில், நம் பலரில் அதிகபட்ச ஆசையாகவே இருக்கிறது. வாரம் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, வார இறுதியில் குடும்பத்துடன் PVR-க்கு போயி படம் பார்ப்பதே தனி சுகம் தான்.

சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான PVR திரையரங்கம், வேறுமொரு திரையரங்கம் என்று சொல்வதை விட, பலரின் செண்டிமெண்ட் ஆக தான் உள்ளது. நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள், குறிப்பாக வார இறுதி நாட்களில் மால்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ்களில் அதிக நேரம் செலவிடுவார்கள். PVR திரையரங்கிற்குச் சென்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் என்ஜோய் பண்ணுவார்கள்.

PVR பெயரின் ரகசியம் என்ன தெரியுமா?

என்னதான் இங்கு நாம் அனைவரும் சென்று வந்தாலும், இந்த PVR -இன் அர்த்தம் என்ன? எப்படி இந்த பெயர் வந்தது என்று நிறைய பேருக்கு தெரியாது. PVR என்றால் ‘பிரியா விலேஜ் ரோட்ஷோ’. . இந்தியாவில் மல்டிப்ளெக்ஸ்களை முதன்முதலில் அறிமுகப்படுத்திய இந்திய மல்டிப்ளெக்ஸ் நெட்வொர்க் தான்.

இந்த நிறுவனம் உருவானதற்கு முக்கிய ரெண்டு நிறுவனங்கள் காரணமாக உள்ளது. ஒன்று பிரியா Exhibitors மற்றொன்று, village roadshow. இந்த 2 நிர்வாணத்தின் கூட்டு முயற்சியால் தான் இந்த பிரம்மாண்ட திரையரங்கம் உருவானது. தற்போது, PVR-ன் உரிமையாளர் அஜய் பிஜ்லி. அவரது தந்தை 1978-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

1997-ல் டெல்லியின் வசந்த் விஹாரில் இது துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் ரசிகர்களை ஈர்க்க சற்று தடுமாறினாலும், இன்று, இங்கு போயி படம் பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்று PVR இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்க நெட்வொர்க் ஆகும்.

- Advertisement -

Trending News