Connect with us
Cinemapettai

Cinemapettai

big-boss-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் டிவியின் வில்லத்தனம் அம்பலமானது.. இதுக்குதான் சுரேஷ் வெளிய போனாராம்! 

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே நெட்டிசன்களுக்கு கண்டண்டுனங்களை வாரி வாரி கொடுத்த மாமனிதர் தான் சுரேஷ் சக்கரவர்த்தி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

மேலும் இது பற்றி சமூக வலைத்தளங்களில் விஜய் டிவிக்கு எதிராக ஏகப்பட்ட கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் வெளியேறியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு  வெளியேற்றப்பட்டார். மேலும் ‘இதற்கான காரணம் உங்களுக்கே தெரியவரும். நான் சொல்ல கூடாது’ என்று போகும் முன்பு சனம்   செட்டியிடம் கூறினார் சுரேஷ்.

இவ்வாறிருக்க சுரேஷ் சக்ரவர்த்தி தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வர காரணம் குக்கு வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்க தான் என்று கூறப்படுகிறது.

suresh-cinemapettai

suresh-cinemapettai

அதாவது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் 14ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு சமையல் கலைஞர் என்பதால் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறியதற்கான காரணம் இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

Continue Reading
To Top