fbpx
Connect with us

தளபதி படத்தில் இருந்து முருகதாஸ் விலகியதற்கு இது தான் முக்கிய காரணம்.. அதிர்ச்சியில் கோலிவுட்.. அடப்பாவமே!

murugadoss-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி படத்தில் இருந்து முருகதாஸ் விலகியதற்கு இது தான் முக்கிய காரணம்.. அதிர்ச்சியில் கோலிவுட்.. அடப்பாவமே!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருந்த ‘தளபதி 65’ படத்திலிருந்து ஏஆர் முருகதாஸ் விலகி விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் இதற்காக பல காரணங்கள் கூறப்பட்டன.

ஆனால், தற்போது ஏஆர் முருகதாஸ் சம்பள பிரச்சனை காரணமாக தான் ‘விஜய் 65’ படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

அதாவது ஏஆர் முருகதாஸின் 25 கோடி ரூபாய் சம்பளத்திலிருந்து குறைத்துக்கொள்ள தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கேட்கப்பட்டதால், அவர் இந்த படத்திலிருந்து விலகியதாக கோலிவுட் வட்டாரங்கள் அடித்துக் கூறுகின்றன. ஆனால் இந்த காரணத்தை ஏஆர் முருகதாஸ் தரப்பினர் மறுத்து வருகின்றனர்.

மேலும் முருகதாசுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் என ஜனவரி மாதமே உறுதி செய்யப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக அனைத்து படங்களின் பட்ஜெட்டும் குறைக்கப்பட்டு வந்ததால், விஜய் மற்றும் முருகதாஸ் சம்பளத்தை குறைக்க தயாரிப்பு தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதாம்.

மேலும் விஜய் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும், ஏ ஆர் முருகதாஸ் ஏற்க மறுத்ததாகவும், அதனால் தான் முருகதாஸ் ‘விஜய் 65’ படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் ஆணித்தரமாய் கூறுகின்றனர் கோலிவுட் வட்டாரங்கள்.

இந்த நிலையில் தற்போது ‘விஜய் 65’ படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவர உள்ள ‘விஜய் 65’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

vijay-murugadoss

vijay-murugadoss

Continue Reading
To Top