தளபதி 65 டைட்டிலுக்கு என்ன அர்த்தம் தெரியுமா.? அவசரமாக வெளியிட்டதால் நடந்த தவறு!

தளபதியின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நிமிடங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் புல்லட், டார்கெட், ரைபிள் இப்படி ஏதாவது இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வித்தியாசமாக Beast என்று வைத்துள்ளனர்.

அப்படி என்றால் என்ன என்று பார்த்தால் மிருகம். மிருகத்தனமான குணம் படைத்த ஒருவரைப் பற்றிய கதை என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

துப்பாக்கியுடன் வெறித்தனமாக வேட்டையாட காத்திருக்கும் தளபதி விஜய்யின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் ஆக்சன் ஸ்பெல்லிங் தவறாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

action-65
action-65

இதைத் தவிர தளபதி Fan made போஸ்டரை வெளியிட்டு விட்டாரா என்ற பரபரப்பை கிளப்பி வருகின்றனர்.

இதைத்தவிர நாளை தளபதியின் பிறந்த நாள் என்பதால் தளபதி 66 படத்தின் அப்டேட் கண்டிப்பாக வெளிவரும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்