நிவேதா தாமஸ்

குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர். இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நடித்து வருகிறார். வரும் படங்கள் அனைத்தையும் நடிப்பதை தவிர்த்துவிட்டு, இப்பொழுது கதை மற்றும் கதாப்பாத்திரம் பொறுத்தே நடிப்பதா, தவிர்ப்பதா என்று முடிவிடுக்கிறார்.

சில வாரங்களுக்கு முன் இவர் தன் ட்விட்டர், இன்ஸ்டக்ரம்  பக்கங்களில், தன் புது லுக் புகைப்படத்தை வெளியிட்டார். அதில் தன்னுடைய நீண்ட கூந்தலை மிக ஷார்ட்டாக வெட்டி இருந்தார்.

nivetha thomas

இது ஏதும் படத்தின் கெட்- அப்பாக இருக்குமோ என்று பல கேள்விகள் எழுந்தது. ஆனால் அது எதற்கும் நிவேதா தரப்பில் இருந்து பதில் வரவில்லை.

Nivetha-Thomas

கடைசியில் பார்த்தால், காரணம் எதுவும் இல்லையாம். எப்படி பார்த்தாலும் முடி தானே சீக்கிரம் வளர்ந்து விடப்போகிறது என்கிறாராரம் அம்மணி. தற்பொழுது படங்களில் நடிக்க கமிட் ஆகமால் ப்ரீயாக உள்ளதால் இந்த ட்ரை செய்துள்ளாராம்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

நாளைக்கே படம் நடிக்க வேண்டும் என்றால் கூட ஜவுரி முடி வைத்து சமாளித்து விடலாமே. விடுங்க மக்களே முடியா முக்கியம், நடிப்பு தானே …