Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே ஒரு படம்தான் எடுத்தேன், என் வாழ்க்கையே கிளோஸ்.. புலம்பும் லிங்குசாமி
தமிழ் சினிமாவில் அதிரடி இயக்குனராக வலம் வந்தவர் லிங்குசாமி. ஆனந்தம் என்ற அழகான குடும்ப படத்திற்கு பிறகு ரன் என்ற அதிரடி திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவையே அதிர வைத்தவர்.
தொடர்ந்து சண்டக்கோழி போன்ற எதைத் தொட்டாலும் வெற்றி என்ற பரபரப்பில் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
பிறகு யார் கண் பட்டதோ தெரியவில்லை, சூர்யாவுடன் லிங்குசாமி முதல் முறையாக கைகோர்த்து வெளியான அஞ்சான் படம் படுதோல்வியை சந்தித்தது.
ஆனால் அதைவிட மோசமான தோல்வியாக அவர் கருதியது லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் படம் தான்.
பெரிய பட்ஜெட்டில் உருவான உத்தம வில்லன் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறத் தவறி விட்டது.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை போல ஒரு டாகுமெண்டரி படத்திற்கு கமர்சியல் படம் ரேஞ்சுக்கு செலவு செய்தது தான் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட காரணம் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

uthama-villain-cinemapettai
அந்த படத்திற்கு பிறகு லிங்குசாமி தற்போது வரை பைனான்ஸ் ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறாராம். இதற்கிடையில் லிங்குசாமி அல்லு அர்ஜுன் கூட்டணியில் ஒரு படம் என்ற அறிவிப்புக்கு பிறகு அந்த படம் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே இருக்கிறது.
கண்டிப்பாக லிங்குசாமி தமிழ் சினிமாவில் மீண்டு வர ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது மட்டும் உறுதி.
